இரயில்வே பாதுகாப்பு படையில் சுமார் 25,000 பேரை தேர்வு செய்ய இரயில்வே நிர்வாகம் முடிவு
ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த அதிநவீன பயிற்சி பெற்ற 25,000 வீரர்களைத் தேர்வு செய்ய ரயில்வே பாதுகாப்புப் படை திட்டமிட்டுள்ளது.
இவர்களில் 22,000 வீரர்கள் ரயில் பயணிகளின் பாதுகாப்புப் பணிகளுக்காக நியமிக்கப்படுவர். எஞ்சியுள்ள 3,000 வீரர்களைக் கொண்ட 3 படைப் பிரிவினர், நக்சல்கள் மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதல்களைச் சமாளிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். இந்த 25,000 வீரர்களைத் தேர்வு செய்வதற்கு ரயில்வே வாரியம் விரைவில் அனுமதி அளிக்கும் என ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நக்சல்களின் செயல்பாடு அதிகமுள்ள வடக்கு, கிழக்கு, வட கிழக்கு ரயில்வே பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களில் இந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என்றார் அந்த அதிகாரி.
ரயில்வே பிராந்திய ராணுவப் படையில் உள்ள 6,000 வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ராணுவத்துடன் ரயில்வே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த வீரர்களுக்கு ரூ. 5 கோடியில் உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள பயிற்சி நிலையத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
மறுமொழியவும்
-
தொகுப்புகள்
- December 2009 (1)
- நவம்பர் 2009 (1)
- செப்டம்பர் 2009 (4)
- ஆகஸ்ட் 2009 (6)
- ஜூலை 2009 (8)
- ஜூன் 2009 (11)
- மே 2009 (3)
- April 2009 (7)
- மார்ச் 2009 (1)
- பெப்ரவரி 2009 (3)
-
வகைகள்
-
RSS
வரவுகள் RSS
மறுமொழிகள் RSS