முகப்பு > சமூகம் > பெற்ற மகளையே தந்தை கொல்லும் நிலை இன்னும் தொடரும் பொது என்ன பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்?

பெற்ற மகளையே தந்தை கொல்லும் நிலை இன்னும் தொடரும் பொது என்ன பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்?

அவரை பார்த்தால் இவரா இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தி வெற்றிகண்டார்! என  ஆச்சரியம் வரும்.பதினெட்டு வருடங்களுக்கு முன்பு கணவனை இழந்தவர்.தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன்(மனோஜ்)  தனது கணவரின் சொந்த ஊரான ஹரியானாவில் வாழ்க்கை.
அவரது மகன் மனோஜ் மூன்றாண்டுகளுக்கு முன்பு பக்கத்தில் இருந்த மெக்கானிக் கடையில் வேலை பார்த்தது வரை வாழ்க்கை நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது.மூன்றாண்டுகளுக்கு முன்னாள் அவரது மகனும்,மருமகளும்(பப்ளி) பெண்ணின் உறவினர்களால் கொடூரமான முறையில் படுகொலைகொல்லப்பட்டார்கள். இதுபோல சாதி விட்டு சாதி காதல் திருமணம் செய்பவர்கள் உள்ளூர் கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பின்படி  கொல்லப்படுவது ஹரியானாவில் ஒன்றும் புதிதல்ல.இதை கௌரவ கொலை(honour killing) என்று குறிப்பிடுகிறார்கள்.அனால் வலிமையான ஆதிக்க சக்திகளால் அமைக்கப்பட்ட கங்காரூ பஞ்சாயத்துக்கள் எனப்படும் உள்ளூர் சாதி பஞ்சாயத்துக்களை எதிர்த்து போராடுவது மிக மிக கடினம்.அதிலும் எழுதப்படிக்கத் தெரியாத,கணவனை இழந்த கொலை செய்யப்பட மனோஜின் தாயார்  சந்திரபதி போன்ற பெண்மணிகள் எதிர்த்து போராடுவதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும்!
அவர் டைம்ஸ் ஆப்  இந்தியா நிருபர் நந்திதா செங்குப்தாவிற்கு அளித்த பேட்டியின் தமிழாக்கம்: 
நிருபர்:இப்போது அமைதிக்கு திரும்பியிருபீர்கள்?உங்களுக்கு நீதி கிடைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?
சந்திரபதி:நான் நீதித் துரையின் மீது முழுநம்பிக்கை வைத்திருந்தேன்.கோர்ட் இந்த தாயாருக்கும் மதிப்பளித்து நியாயமான தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆனால் என்னுடைய போராட்டம் இன்னும் ஓயவில்லை.எனது மகனுக்கும், மருமகளுக்கும் பாதுகாப்பு கொடுத்த போலீஸ்காரர்கள் இந்த கொலையாளிகளுக்கு உடந்தையாயிருந்திருக்கிறார்கள்.அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.அது மட்டுமல்லாமல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள சாதி பஞ்சாயத்து தலைவர் கங்காராசுக்கு தூக்குத் தண்டனை வழங்கவேண்டும்.அவர்தான் இந்த படுபாதக செயலை தூண்டிவிட்டவர்.  
நிருபர்:திருமணம்   செய்ததிலிருந்து நீங்கள் இதே ஊரில் தான் வசிக்கிறீர்களா?
சந்திரபதி:அமாம்.எனக்கு பதினைந்து வயதில் திருமணம் ஆனபோது இந்த கிராமத்திற்கு வந்தேன்.இடையில்  ஒரு ஐந்து வருடம் மட்டும் எனது கணவர் இராணுவத்தில் வேலை பார்த்ததால்  கான்பூரில் இருந்தோம்.அதற்க்கு பிறகு நான் எனது குடும்பத்தை கவனித்து கொண்டு இதே ஊரில் தான் வாழ்ந்து வருகிறேன்.
 நிருபர்: நீங்களும் அந்த சமூகத்தின் ஒரு அங்கம் தான்.அந்த சமூகம் சாதி விட்டு சாதி திருமணம் செய்வது தவறு எனும்போது நீங்கள் மட்டும் ஏன் உங்கள் மகன் திருமணத்தில் மட்டும் வித்தியாசமாக முடிவெடுத்தீர்கள்?
சந்திரபதி:கட்டாய திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.எனது மகள்கள் விருப்பப்பட்டால்கூட அவர்கள் விருப்பப்பட்டவரை திருமணம் செய்யலாம்.எனவே எனது மகன் விவகாரத்திலும் இது தான்.பப்ளி ஒரு நல்ல பெண்.இதனால் அவர்கள் ஊரை விட்டு ஓடிப்போகும் முடிவு எனக்கு முன்பே தெரியும் என்று அர்த்தம் இல்லை.மனோஜ் அவர்கள் திருமணத்திற்கு   பிறகுதான் எனக்கு செய்து சொன்னான்.எனது ஊரில் இதே போன்ற பல கௌரவகொலைகள் குறித்து கேள்விப்பட்டிருந்த போதும், திருமண ஜோடிகள் இருவரும் கொலை செய்யப்படுவது இது தான் முதல் முறை.நான் படிக்காதவளாக இருந்தாலும் எனது குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்கிறார்கள்.நாங்கள் விவாதிப்போம்.எது சரி, எது தவறு என்று எனக்கு தெரியும்.நீங்கள் தான் காலத்திற்கேற்ப மாறிக்கொள்ள வேண்டும்.  
நிருபர்:உங்களுடைய மகனும் மருமகளும் ஜூன் 2007-ஆம் ஆண்டு படுகொலைகொலை செய்யப்பட்டதிலிருந்து உங்களுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்குமே?
சந்திரபதி:கண்டிப்பாக.முதலில் கிராமத்திலிருந்து எங்களை தள்ளி வைத்தார்கள்.எல்லோரும் எங்களை கவனித்து கொண்டிருப்பார்கள்..ஆனால் யாரும் பேச மாட்டார்கள்.எங்களுக்கு இந்த கிராமத்தில் உறவினர்களும் கிடையாது.சில நேரங்களில் ரேசன் வாங்குவதோ, பால் வாங்குவதோ கூட கடினம்.ஊரில் எங்களுக்கு எதிர்ப்பு அதிகம்.போலிஸ் பாதுகாப்பு இல்லாமல் எங்களால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது.நான் எப்.ஐ.ஆர் பைல் பண்ணுவதற்கு இங்கும் அங்கும் அலையவேண்டியிருந்தது.
 
நான் கொலைகாரர்கள் மீது கேஸ் போட்ட பிறகு பஞ்சாயத்திலிருந்து பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள்.ஒரு கோடி ரூபாய் தருகிறோம் கேஸை வாபஸ் வாங்கு என்றார்கள்.தங்களது நிலத்தை கூட விற்றுவிடுவதாக கூறினார்கள்.எனது இரண்டு பெண்களுக்கும் நிறைய செய்வதாக கூறினார்கள்.அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.மூன்று வருடங்கள் பயத்துடன் காலம் கடத்தி வந்தோம்.அவர்கள் எந்த நேரத்திலும் எதுவும் செய்யலாம்.நாங்கள் அத்துணையும் சந்தித்தோம்.வேறு எந்த வாய்ப்பும் இல்லை.இது இதோடு முடிவதில்லை.சுப்ரீம் கோர்ட் வரை சென்றாலும் நான் விடுவதாக இல்லை.
நிருபர்:இந்த காலகட்டத்தில் உங்களுக்கு என்ன மாதிரியான உதவி கிடைத்தது?
சந்திரபதி:எதுவும் இல்லை.யாரும் எங்களுடன் பேசுவது கூட இல்லை.ஊடகங்கள் தான் எங்களுக்கு உதவி செய்தன.மூன்று வருடங்களுக்கு முன்பு ஊடகங்கள் கொடுத்த அழுத்தத்தின் பெயரிலேயே என்னுடைய ‘கம்ப்லைண்டை’ போலீசார் வாங்கிக்கொண்டார்கள்.சேவை அமைப்புகள் அவ்வப்போது வந்து எங்களை பார்த்து செல்வதுண்டு.
நிருபர்:தங்களுக்கு இதுபோன்று போராட தைரியம்  எங்கிருந்து வந்தது?
சந்திரபதி:தனது மகன் கொலை செய்யப்பட்டதும் தாய் என்ன செய்வாள்?நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்.எனது மகனும் பப்ளியும் கிராமத்திலிருந்து காணாமல் போனதும், பப்ளி குடும்பத்தினர் என் மீது ‘ஆள் கடத்தல்’ என குற்றம் சுமத்தி  போலீசில் மனு கொடுத்தார்கள்.பஞ்சாத்து கொடுத்த அழுத்தம் காரணமாக் போலீசார் தினந்தோறும் வந்து என்னை விசாரித்தார்கள்.நானும் அவர்களை தேடினேன்.ஒரு மாதத்திற்கு பிறகு எனது மகன் பொன் செய்தான். தானும் அந்தப் பெண்ணும் கிராமத்திற்கு வருவதாகச் சொன்னான்.வரும் போது இருவரின் விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்தது கொண்டதாக எழுதிக்கொடுப்பதாக கூறினான்.அதோடு இந்த வழக்கு முடிந்திருக்கும்.ஆனால் அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள்.அது தவறு.நான் என்ன செய்ய முடியும்.அழுதேன்.மௌனமாக இருந்தேன்.அப்படியே இருந்தால் என்னுடைய மற்ற குழந்தைகளின் நிலை என்ன?நான் மட்டும் போராடவில்லை என்றால் எங்கள் வாழக்கை இன்னும் மோசமாகி இருக்கும்.எங்களை ஊரை விட்டு விரட்டி இருப்பார்கள்.எனது குடும்பத்தினர் என்னோடு இருந்தார்கள்.கொலைகாரர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என முடிவெடுத்தோம்.
நிருபர்:நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்தீர்களா?அப்படியானால் என்ன வேண்டிக்கொண்டீர்கள்?
சந்திரபதி:கடவுளிடம் வேண்டாமல் என்ன செய்வது.காளி, ஹனுமான், சிவா என எல்லா தெய்வங்களிடமும் வேண்டிக்கொண்டேன்.எனக்கு சக்தி வேண்டும் என வேண்டிக்கொண்டேன்.அந்த கொலைகாரர்களை தூக்கில் போட வேண்டும்.எனக்கு நீதி வழங்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன்.
நிருபர்:இந்த தீர்ப்பின் மூலம் உங்கள் கிராமத்தில் மனமாற்றம் உருவாகும் என நினைக்கிறீர்களா?
சந்திரபதி:போராட வேண்டும் என  நினைப்பவர்களுக்கு இது ஒரு படிப்பினை.இது போன்ற கௌரவ கொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.ஒரு ஆண் தனது மகளையே படுகொலை செய்ய துணியும் சமூகத்தில் என்ன ஒரு பெரிய மாற்றத்தை நாம் எதிர்பார்க்க முடியும்?
Categories: சமூகம்
  1. 8:06 பிற்பகல் இல் 04/04/2010 | #1

    ஏனுங்க ஒரு ஓட்டுக் குத்தலாம்னு பாத்தா தமிழ்மணம் கையைக் காணுங்களே?

  2. 10:33 பிற்பகல் இல் 04/04/2010 | #2

    //காளி, ஹனுமான், சிவாஜி என எல்லா தெய்வங்களிடமும் வேண்டிக்கொண்டேன்.//

    பகிர்வுக்கு நன்றி.

    பை தி வே, அப்பெண்மணி ஷிவ்ஜி (சிவபெருமான்) எனக் கூறியிருக்க வேண்டும் சிவாஜியாக இருக்காது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  3. விமலவன்
    4:28 மு.பகல் இல் 05/04/2010 | #3

    நண்பர்கள் அக்னி சித்தன் மற்றும் டோண்டு ராகவன் ஆகியோருக்கு நன்றி.தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள பிழைகளை திருத்திக்கொள்கிறேன்.

  1. No trackbacks yet.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.