உலகம் மாவோயிஸ்டுகள் காணும் கனவை விட பெரியது
இது ஒருபுறம் இருக்க, இந்திய மாவோஸ்டுகள் 2050-ஆம் ஆண்டுக்குள் ஆயுதப் புரட்சியின் மூலம் மாவோஸ்ட் கம்யுனிச ஆட்சியை ஆட்சி அமைக்க விரும்புவதாக அறிவித்துள்ளார்கள்!ஆனால் உலகம் மாவோஸ்டுகள் காணும் கனவை விட பெரியது!
காரணம்! உலகம் ஜனநாயகம், மக்களாட்சி தத்துவங்களையே சிறந்ததாக கருதி வாழ பழகிகொண்டுவிட்டது!நேபாளில் கூட மாவோயிஸ்டுகளால் ஜனநாயக பாதையையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம்!மாவோ சொன்னது போலவோ அல்லது மார்க்ஸ் சொன்னது போலவே ஒரு ஐடியல் கம்யுனிச சமுதாயத்தை அமைக்க முடியாது.உலகில் இதுவரை இருந்த கம்யுனிச அரசுகளும் முழுமையாக அவர்களின் சிந்தாந்தப் படி அமையவும் இல்லை!ரஷ்யா முதற்கொண்டு ஐரோப்பாவிலிருந்த கம்யுனிச நாடுகளினால் கூட கம்யுனிச சித்தாந்தத்தை தொடர முடியாமல் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிவிட்டார்கள்.கம்யுஸ்ட் ஆட்சி பல நாடுகளில் உருவானாலும் கூட அவற்றின் நிலைத் தன்மை கேள்விக்குறியது.சீனாவில் ஒரு கட்சி கம்யுனிச ஆட்சி இருந்தாலும், அங்கும் சமத்துவம் இல்லை.ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.மனித உரிமை பற்றி அங்கு பேசவே கூடாது.அரசு அதிகாரிகளிடையே ஊழலுக்கும் பஞ்சமில்லை.எனவே கம்யுனிச அரசு என்பது அடிப்படையில் ஒரு கட்சி ஆட்சி என்பதை தவிர நடைமுறையில் மற்ற நாடுகளைப் போல தான். அதுவும் நக்சல்கள் அவர்கள் கூறுவதை போல 2050-இல் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தாலும், காலப்போக்கில் ஒன்றும் பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை!அப்போதும் ஏழைகள் இருப்பார்கள், முதலாளிகள் சுரண்டிக்கொண்டே தான் இருப்பார்கள்! என்ன கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்!.அவ்வளவு தான்!
எங்கெல்லாம் மாவோஸ்டுகள் குறிப்பாக வளர்ந்திருக்கிறார்கள்?.அரசுகளின் மெத்தனப் போக்கினால்,பாராமுகத்தால் எங்கெல்லாம் வறுமை தலைவிரித்தாடுகிறதோ,எங்கெல்லாம் முதலாளிகள்,கந்துவட்டிக்காரர்கள் மற்றும் அரசு அமைப்புகளால் விளிம்பு மனிதர்கள் வஞ்சிக்கப்படுகிறார்களோ அல்லது சுரண்டப் படுகிறார்களோ அங்கெல்லாம் நக்சல்கள் வளர்ந்திருக்கிறார்கள்! அதை அரசுகள் முதல் சமூகவியலாளர்கள் வரை அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.நக்சலிசம் உருவாக கூறப்படும் அனைத்து காரணங்களும் மறுக்க முடியாதவை.அரசுகள் முதலாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக ஏழைகளை, பழங்குடிகளை காலம் காலமாக வஞ்சித்து வருகிறார்கள் என்பதும் வெட்கப்பட வேண்டியது தான். நக்சல்கள் வளர்ந்த பகுதிகள் காலம் காலமாக வளர்சிப்பனிகளில் இருந்து புறக்கணிக்கபட்டன என்பதும் நூறு சதவிகிதம் மறுக்க முடியாதது தான்!
எத்தனையோ தலைவர்களை நாம் உண்மையான சமூக புரட்சியாளர்களாக நம்பியிருக்கிறோம்.கடைசியில் அவர்களெல்லாம் தங்களது சாதிக்குள் அல்லது சாதி அடையாளத்திற்குள் கரைந்து போயிருக்கிறார்கள் அல்லது சாதி அபிமானிகளால் கரைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு!
அருமயான கட்டுரை.
//நக்சல்கள் ஆயுதப் புரட்சியைக் கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புவதே நல்லது!// சரியாகச் சொன்னீர்கள்!