இது எந்த ஊரு நியாயமுங்க?
சட்டத்திற்கு புறம்பாக நிலம் அபகரித்தது தொடர்பாக நீதிபதி தினகரன் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்து,அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக ஆரம்பகட்ட வேலைகள் இராஜ்ய சபாவில் ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் கர்நாடகாவில் வக்கீல்களால் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட போராட்டங்களினாலும்,ஊடகங்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவும் உச்ச நீதிமன்றம், நீதிபதி தினகரனை கட்டாய விடுப்பில் போகச்சொல்லியது.இருந்தும், அவர் கட்டாய விடுப்பில் போக மறுத்ததன் விளைவாக அவரை சிக்கிம் ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாயின.
கர்நாடகா ஐகோர்ட்டுக்கு தகுதியில்லையாம்!ஆனால் சிக்கிம் ஐகோர்ட்டுக்கு தகுதியானவராம்!இது எந்த ஊரு நியாயமுங்க?
சிக்கிம் மாநில பார் கவுன்சில் வக்கீல்களும் போராட்டத்தில் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.அவர்கள் உச்ச நீதிமன்றம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்கள்.தங்களுடைய எதிர்ப்பையும் மீறி உச்ச நீதிமன்றம் நீதிபதி தினகரை சிக்கிமிர்க்கு இடமாற்றம் செய்தால் அவரது பதவி ஏற்பு விழாவை புறக்கணிக்க போவதாக அம்மாநில வக்கீல்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே நீதித் துறை, நாட்டின் பல்வேறு மாநிலங்களில், கீழ் கோர்ட் நீதிபதிகள் முதல் ஐகோர்ட் நீதிபதிகள் வரை எழுந்துள்ள ஊழல் குற்றசாட்டுக்களால் தனது பெயரை கெடுத்துக் கொண்டுள்ளது.இந்நிலையில் நீதிபதி தினகரன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஆடும் கண்ணாம்பூச்சி ஆட்டமானது, அதன் நம்பகத்தன்மையை இன்னும் கேள்விக்குறியதாக்கப்போகிறது!
அண்மைய மறுமொழிகள்