தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்;ஆனால் மகன் ஐ.ஏ.எஸ் ஆனார்
எட்டு வருடங்களுக்கு முன்பு தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்க மறுத்த ஒரே காரணத்திற்காக குலாம் ரசூல் ஷா காஷ்மீர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.ஆனால் இன்று அவரது மகன் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி.அதுவும் இந்த ஆண்டு வெளியான ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் தேர்வு முடிவுகளில் இவர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை.இத்துணைக்கும் இவரது பூர்வீகம் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வார மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்.
ஷா பைசல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷெர்-இ-மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர்.தேர்வு முடிவு தெரிந்த மகிழ்ச்சியில் தன்னால் பேச இயலவில்லை என தெரிவித்த ஷா பைசல் “என்னுடைய தந்தை தீவிரவாதிகளால் கொள்ளப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்ததை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.என்னுடைய வாழ்க்கையே முற்றிலும் இழந்தது போல உணர்ந்தேன்.எனக்கு கணிதம் மற்று ஆங்கிலம் சொல்லிக் கொடுத்த அவர் இந்த மகிழ்ச்சியில் பங்குகொள்ள இங்கு இல்லை” என கூறினார்.இதில் இன்னுமொரு சிறப்பு இவர் எந்த கோச்சிங் சென்டரிலும் படிக்காமல் தன் சுய முயற்சியுடன் படித்தவர் என்பது.
நம்ம தமிழக மாணவர்கள் இந்த ஆண்டும் எப்போதும் போல ஐ.ஏ.எஸ் தேர்வில் கலக்கி இருக்கிறார்கள்.தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் கோச்சிங் நிறுவனங்கள் போட்டியின் காரணமாக ஆளுக்கொரு புள்ளி விபரங்களை கொடுத்தாலும், தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றிருப்பது உண்மை.
அண்மைய மறுமொழிகள்