தொகுப்பு

Posts Tagged ‘விளையாட்டு’

‘பத்மா’ விருதெல்லாம் அப்புறம்;பணம் தான் முக்கியம்

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மா’ விருது வழங்கும் விழாவை பிரபல கிர்க்கெட் வீரர்கள்  இந்திய அணியின் கேப்டன் தோணி, மற்றும் சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.

‘பத்மா’ விருது வழங்கும் விழா நடந்த அன்று இந்திய அணியின் கேப்டன் தோணி ஒரு விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்! அணித்தலைவரே இப்படி இருந்தால் மற்ற வீரர்கள் எப்படி விருதுக்கு மரியாதை கொடுப்பார்கள்? ஹர்பஜன் சிங் அதே நாளில் குடும்ப சூழ்நிலை காரணமாக கலந்து கொள்ளமுடியவில்லை என கூறியிருக்கிறார். ஆனால் அடுத்த நாளே ஒரு கம்பெனி விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

எந்த விருது வாங்கும் கிரிக்கெட் வீரராவது உலக கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி  கொடுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியிலோ அல்லது சில தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் விருது நிகழ்ச்சியிலோ கலந்துகொள்ளாமல் இருக்கிறார்களா?

இவர்கள் நாட்டுப்பற்றெல்லாம் பணம் கொடுத்தால் தான் காண்பிப்பார்கள்.ஆண்டு முழுவது கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் இவர்களுக்கு ஒரு நாளைக்கூட மிச்சம் வைக்க நேரம் போதவில்லை.

இதற்க்கு முன்பு ஒரு முறை கிரிக்கெட் ஆட்டமானது மலேசியாவில் நடந்த காமென்வெல்த் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆஸ்திரேலிய அணியினர் அனைவரும் அப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.ஆனால் இந்திய அணி தமது இரண்டாம் கட்ட வீரர்களுடன் சென்றது.காரணம்!வெற்றி பெற்றால் கொடுக்கப்போகும்  ஜுஜுபி மெடலுக்காக யாராவது விளையாடுவார்களா என்ற எண்ணம் தான்.அப்போதும் இதற்க்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பியது.

இப்போதும் கூட நாம் கிரிக்கெட் பார்க்கும் போது நாம் நம்முடைய தேசபக்தியோடு தான் நமது கிரிக்கெட் அணியினர் விளையாடுவதை பார்க்கிறோம்.ஆனால் நமது கிரிக்கெட் அமைப்பாளர்களுக்கு தேர்தல் வரை ஐ.பி.எல் போட்டிகளை நிறுத்தி வைப்பதற்கு கூட பொறுமையில்லை. அவசரமாக தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றியிருக்கிறார்கள்.சில ஆண்டுகளுக்கு முன்பு பி.சி.சி,ஐ, கிரிக்கெட் வாரியம் சுதந்திரமான தனி அமைப்பு என்பதால் மத்திய அரசு நிர்வாகத்தில் தலையிட முடியாது என நீதிமன்றத்தில் வாதிட்டது.

இவை எல்லாம் பார்க்கும் போது கிரிக்கெட் வாரியமும், கிரிக்கெட் வீரர்களும் மிகத் தெளிவாகத்தான் இந்திய அரசை புறக்கணிக்கிறார்கள் என தெரிகிறது.பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்ற பழமொழி சரியாகத்தான் இருக்கிறது!

பத்மா விருதெல்லாம் ஏழ்மையையும் மீறி கடிமையாக உழைத்து கடைசியில் தங்கமோ வெள்ளியோ வாங்கி,இந்திய பெருமையை உலகெங்கும் நிலைநாட்டி,  பத்திரிக்கைகளின், அரசு நிர்வாகங்களின் பாராமுகத்துடன் வரும் மற்ற விளையாட்டு வீரர்களுக்குத்தான் போலும்!

பிரிவுகள்:விளையாட்டு குறிச்சொற்கள்: