தொகுப்பு

Archive for the ‘துணுக்குகள்’ Category

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் – சில விபரங்கள்

                                                    

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமானது இந்தியாவில் ௨005 ஆம் அண்டுமுதல் மத்திய அரசால் மாநிலங்கள் மூலமாக  மிகச்சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டமானது கிராமப்புறங்களில் வறுமை ஒழிக்கும் நோக்கோடு ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். சமீப காலங்களில் இது தேர்தல் பிரச்சாரங்களில் முக்கியமான சாதனையாக முன்வைக்கப்படுகிறது.இத்திட்டத்தின் செயல்பாடுகள் இதுவரை… 

                                              இந்தியா

வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட குடும்பங்கள் :  3.71 கோடி
 மனித வேலை நாட்கள் [கோடிகளில் ]: 
 மொத்தம் :  152.33
 தாழ்த்தப்பட்டவர்கள் :  45.46 [29.84%]
 பழங்குடியினர் :  38.22 [25.09%]
 பெண்கள் :  74.02 [48.59%]
 மற்றவர்கள் :  68.65 [45.07%]
 மொத்த வேலைகள் :  21.78 இலட்சம் .
 முடிவடைந்த வேலைகள் :  8.04 இலட்சம் .
 நடந்து கொண்டிருக்கும் வேலைகள் :  13.75 இலட்சம் .

                                 தமிழ்நாடு மட்டும்

தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் கட்டத்தில் கடலூர், திண்டுக்கல், நாகபட்டினம், சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம்  போன்ற மாவட்டங்களில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.இரண்டாவது கட்டமாக தஞ்சாவூர்,திருவாரூர், திருநெல்வேலி மற்றும் கரூர் மாவட்டங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டது.மூன்றாவது கட்டத்தில் அனைத்து மாவட்டங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டு இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதுவரை…

வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட குடும்பங்கள் :  28.96436 இலட்சம்

மனித வேலை நாட்கள்  [இலட்சத்தில்]:
மொத்தம் :  940.79
தாழ்த்தப்பட்டவர்கள் :  551.77 [58.65%]
பழங்குடியினர் :  16.5 [1.75%]
பெண்கள் :  757.16  [80.48%]
மற்றவர்கள் :  372.52 [39.6%]
மொத்த நிதி ஒதுக்கீடு :   1269.2   கோடி . 
செலவு :   785.2 கோடி.
எடுக்கப்பட்ட மொத்த வேலைகள் :   30625 
முடிக்கப்பட்ட வேலைகள் :  8688
நடந்துகொண்டிருக்கும் வேலைகள் :  21937 

நன்றி:http://nrega.nic.in/

விவசாயக்கூளிகளுக்கான குறைந்தபட்ச கூலியானது  2005-06 லிருந்து  01.12.2008  ல் பல மாநிலங்கள் உயர்த்தியுள்ள நிலையில் தமிழ்நாடு மட்டும் அதே 80ரூபாய் என்ற நிலையை கடைப்பிடித்து வருகிறது .

பிரிவுகள்:துணுக்குகள்

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லுரிகளின் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லுரிகளின் எண்ணிக்கை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் புள்ளிவிவரப்படி(31.08.2008) மொத்தம் 349.தமிழகத்தில் கடந்த ஆண்டு புதிதாக  76 பொறியியல் கல்லுரிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், தற்பொழுது மொத்தம்  354 பொறியியல் கல்லுரிகள் இருப்பதாகவும், அதில் தற்சமயம் ஒரு இலட்சத்து நாற்பத்து எழாயிரம் இடங்களுக்கு மேல் இருப்பதாக  தினமலர் பத்திரிகை செய்தி தெரிவிக்கறது. மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  148 பொறியியல் கல்லுரிகள் இந்த ஆண்டு   துவங்க அனுமதி கேட்டு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு மனுக்கள் குவிந்திருப்பதாகவும் தெரிவிக்கிறது.புதிதாக மேலாண்மை படிப்புக்கள் துவங்க நாற்பது விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.

(தற்சமயம் அண்ணா பல்கலைக்கழகம் 16,  அரசு மற்றும் அரசு சார்ந்தது 9,  சுயநிதி 366 என மொத்தம் 391பொறியியல் கல்லூரிகள் உள்ளன.)

பிரிவுகள்:துணுக்குகள்

உலகம் முழுவதிலும் தமிழர்கள் – ஒரு புள்ளிவிபரம்

இந்தியா: 63,000,000 , ஸ்ரீலங்கா : 3,600,000 ,மலேசியா: 2,000,000, பர்மா: 500,000, சிங்கப்பூர்: 410,000,  கனடா: 400,000, இங்கிலாந்து: 300,000, மொரிசியஸ்: 1,30,000, ரியுனியன் : 126,000, இத்தாலி : 100,000, அமெரிக்கா : 100,000, ஜெர்மனி : 60,000
தென்னாப்பிரிக்கா:over 500 000, பிரான்ஸ்: 60,000, சுவிட்சர்லாந்து : 43,000, இந்தோனேசியா : 40,000,குவாடிலோபே :40,000, ஆஸ்திரேலியா : 30,000,நெதெர்லாந்து : 20,000, நோர்வே: 12,000, ஸ்வீடன் : 10,000,தாய்லாந்து : under 10,000, மாலத்தீவு : under 10,000, டென்மார்க் : under 7,000, நியுசிலாந்து : 3,000  மற்றும் பல நாடுகளில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.

பிரிவுகள்:துணுக்குகள் குறிச்சொற்கள்: